
இது குறித்து தி.மு.க இன்று (வெள்ளிக்கிழமை) செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த செய்தி குறிப்பில், ‘தமிழ்நாட்டில் மும்மொழித்திட்டத்தை அறிவித்து, அதன் மூலம் ஹிந்தியை திணிக்கும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தி.மு.க கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனையடுத்து வரைவு கொள்கையில் உள்ள ஹிந்தித் திணிப்பு தொடர்பான வாசகங்களை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.
ஆனாலும் ஏதாவது ஒரு வடிவில் ஹிந்தித் திணிப்பில் தீவிரமாக இருக்கும் மத்திய பா.ஜ.க அரசு, 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் ஹிந்தி பேசாத மாநிலங்களில் கூட ஹிந்தியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை நியமிப்பதற்கு நிதி ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் தமிழ் மொழிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் புதிய வரைவு தேசிய கல்விக் கொள்கை பற்றி வல்லுநர்கள் கருத்தினை அறிய தி.மு.க விரும்புகிறது.
எனவே, இக்கொள்கை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளித்திட தி.மு.க சார்பில் ஒரு ஆய்வுக் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
