ரஷ்யாவின் இணக்கமின்மையை ஒரு சாக்குப்போக்காக கூறி விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகத் தீர்மானித்துள்ளது என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான அமெரிக்காவின் திட்டமிட்டமாக இது இருக்கலாம் என ரஷ்ய தூuyதுவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரஷிய தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு அணு ஆயுதங்களை சோதனை செய்வதை தடைசெய்யும் சர்வதேச ஒப்பந்தத்திலிருந்து விலக, ரஷ்யா திட்டமிட்டிருந்தது என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.
ரஷ்யாவின் இணக்கம் குறித்த தவறான கூற்றுக்களை கொண்டு, இவற்றைக்கொண்டு நகர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது என தெரிவித்த அவர். இதன் பின்னர் மீண்டும் ரஷ்யாவை குறை கூறுவது தவறான விடயம் என்றும் தெரிவித்தார்.
விரிவான அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டபோதும் அதற்கான அங்கீகாரத்தை அமெரிக்கா வழங்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.