மேலும், இதற்கான வாய்ப்பு இன்னும் ஐந்து மாதங்களில் மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நுவரெலியாவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை நேசிக்கும் உண்மையான அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
மேலும், சுமார் 16 இலட்சம் பேரளிவலான அரச சேவையாளர்களும், புத்திஜீவிகளும் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றுவார்களாயின் நாட்டில் அபிவிருத்தி என்பது ஒரு சவாலான விடயமாக அமையாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட மக்களுக்காக முன்னொருபோதும் நிறைவேற்றப்படாத வேலைத்திட்டங்கள் கடந்த ஐந்து வருடங்களாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் மக்களுக்கான விரிவான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டை சீரழிப்பதற்கான இலகுவான மார்க்கம் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலாகும் என்று இதன்போது தெரிவித்த ஜனாதிபதி, அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் காரணமாக நாட்டிற்கு நன்மைபயக்கும் விடயங்களிலும் பலன்களை பெற்றுக்கொள்வது மிக சிரமமாகும் எனத் தெரிவித்தார்.
நாட்டிற்கு நன்மை பயக்கும் விடயங்கள் தொடர்பில் அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் உண்மையான மனிதநேயத்துடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஊழலை ஒழிக்கவே இந்த அரசாங்கம் வந்தது. ஆனால் எதனையும் செய்ய முடியாமல் போயுள்ளது. எனவே, ஊழல் அற்ற மற்றும் நாட்டை நேசிக்கும் உண்மையான அரசை தெரிவு செய்வதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும், இலங்கையில் 15,000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் கைதிகளாக இருக்கிறார்கள். இதனால், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்களை புனர்வாழ்வுக்குட்படுத்தும் 11 புனர்வாழ்வு மையங்களும் நிரம்பி வலிகின்றன என்றும் அவர் கூறினார்.