தனிநபர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மரண தண்டனை ஒழிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு இன்று (புதன்கிழமை) அரசாங்க அச்சுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு சட்டத்தின் மூலமும் மரண தண்டனையை விதிப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருப்பதனை இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொடவினால் தனிநபர் பிரேரணை கடந்த மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த திருத்தம் சட்டமன்றத்தின் ஒப்புதலை பெற்றால், இது நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் எந்தவொரு நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோ அத்தகைய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபராக அவர் கருதப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.