LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, July 31, 2019

கிளிநொச்சி இரட்டைக் கொலையில் திருப்பம் – வாக்குமூலத்தில் வெளிவந்த உண்மை

கிளிநொச்சி ஜெயந்திநகர் பகுதியில் இடம்பெற்ற கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தில் அயல் வீட்டுக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், குறித்த கொலை தொடர்பாக அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டாருடன் தனக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் இதன்போது, தன்னை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ள சந்தேகநபர், அவமானம் பொறுக்க முடியாமல் நேற்று அதிகாலை ஒன்று முப்பது மணியளவில் அவர்களின் வீட்டுக்குள் புகுந்து கம்பி ஒன்றினால் வீட்டு இளைஞனை தாக்கியதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இதனை அவரது தாயார் கண்டமையால் அவரையும் கம்பியால் தாக்கி கொலை செய்ததாகவும் பொலிஸாருக்கு ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
குறித்த விசாரணைகளை மேற்கொண்ட கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கருணாரத்னம் ஜெசிந்தன் மற்றும் அவரது குழுவினர், குற்றத் தடயவியல் பொலிஸார் சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கு அமைவாக சம்பவ இடத்திற்கு சென்று வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றை இறைத்து சோதனை செய்தனர். இதன்போது இறந்தவரின் கைத்தொலைபேசி ஒன்றும் கொலை செய்யப் பயன்படுத்திய கம்பி ஒன்றும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளை சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, ஜெயந்தி நகரிலுள்ள வீடொன்றிலிருந்து விஷ்ணுகாந்தி வள்ளியம்மை மற்றும் அவரது மகனான விஷ்ணுகாந்தி லிங்கேஷ்வரன் ஆகியோர் நேற்று அதிகாலை சடலங்களாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதனிடையே இறந்த தாயின் மூத்த மகன் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்த நிலையில் அவரினால் குறித்த இரண்டு கொலைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குறித்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7