இலங்கை மற்றும் அமெரிக்க வர்த்தக சபையின் வருடாந்த கூட்டம் நேற்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “சகலருக்குமான பொருளாதார வாய்பபுக்களை உருவாக்குவதற்கு உதவுவதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்ய அமெரிக்கா விரும்புகிறது.
பலம் மிக்கதும், சகல தரப்பையும் அரவணைப்பதுமான பொருளாதார வளர்ச்சி இலங்கையின் சுயாதிபத்தியத்தை மேம்படுத்தும். இது தொடர்பானதே மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அபிவிருத்தி உடன்படிக்கை ஆகும்.
அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சகல வீதிகளினதும் மேற்பார்வையும், கட்டுப்பாடும் இலங்கையிடமே இருக்கும். அமெரிக்கா எந்தவொரு நிலத்தையும் சொந்தமாக்கப் போவதில்லை என்பதுடன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவோ, நிர்வகிக்கவோ முயற்சிக்கவில்லை.
இதனிடையே, இந்த உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் நிலங்களின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுக்குமென கவலை வெளியிடப்படுகிறது.
இலங்கை அரசாங்கமும், அமெரிக்காவும் தனியார் துறையுடனும், சிவில் சமூகத்துடனும் சேர்ந்து கூட்டாக வகுத்திருக்கும் உத்தேச மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு 48 கோடி அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதை நோக்காகக் கொண்டதாகும்” என்று அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் விளக்கமளித்துள்ளார்.