வழக்கமாகும். குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பாரம்பரியமாக சைவத் தமிழ் இல்லங்களிலும் அலுவலகங்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களிலும் ஆடிப்பிறப்பு விழா கொண்டாடப்பட்டதுடன் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்னும் உண்டி வகைகளை உண்டு மகிழ்ந்துள்ளனர்.
யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா சோமசுந்தரப்புலவரின் ஊரான நவாலி மகாவித்தியாலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழ் பேராசிரியர்கள், கல்விமான்கள், பாடசாலை மாணவர்கள், ஊர்ப் பொதுமக்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை என்ற பாடலைத் தந்த தமிழ்த் தாத்தா நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
விழாவில் ஆடிப்பிறப்புப் பற்றிய சிறப்புரைகளும் இடம்பெற்றன.