![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjhzKkaTVgEMSw3MDvOvkA_7X9n5La43abAARvVNnNe51joNDW4td3j_WFEnTnvxfS-nMRDU0eAMItGLbw1gS_Ihs3UbpvYs96EMeQ2gANDNmj-Fz6PO9MIRpLQU8j0ETFsT42D7D6bKH4/s320/Douglas-Devananda.jpg)
திணைக்களம் சார்ந்து அண்மைக்காலமாக ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பிரச்சினைகள் காரணமாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான முரண்பாடு தோற்றுவிக்கப்பட்டு வருவதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேள்வியெழுப்பி உரையாற்றம்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் திணைக்களம் சார்ந்து பல்வேறு பிரச்சினைகள் உருவாக்கப்படுவதக்கவும் குறித்த பிரச்சினைக்களுக்கு இதுவரையில் தீர்வுகள் எட்டப்படாத நிலையே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இத்தகைய பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு உணர்வு ரீதியிலான தாக்கங்களையும், வாழ்வாதார மற்றும் வாழ்விடங்களுக்கான கேள்விக்குறியினையும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், இப்பிரச்சினைகள் தீர்க்கப்படுவது மிகவும் அத்தியவசியமாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)