அண்மையில் சீனாவில் கைது செய்யப்பட்டு அவர் மீது போதைப்பொருள் சம்பந்தமாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர இழுபறி தற்போது மேலும் வலுவடைந்துள்ளது.
குறித்த கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டமையை பீஜிங் நிர்வாக நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
ஷாண்டோங் மாகாண பொது பாதுகாப்பு பணியகம் வெளிநாட்டு மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் தொடர்பான வழக்கை கையாண்டு வருவதாக சமீபத்தில் வௌிவிவகாரத்துறை அமைச்சின் பேச்சாளர் ஜெங் ஷூவாங் செய்தியாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் தொடர்புபட்டிருப்பதாகவும் இந்த வழக்கு விசாரணை மட்டத்தில் உள்ளதாகவும், தொடர்புடைய தூதரகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜெங் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷாங்டொங் மாகாணத்தில் குறித்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தூதரக ரீதியாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கனடா தெரிவித்துள்ளது.
சீனாவின் தொலைத்தொடர்பு முன்னோடியான ஹூவாவேயின் தலைமை நிறைவேற்று அதிகாரி மெங் வாங்ஷோவின் கைதினை அடுத்து கனடா ராஜதந்திரிகள் இருவர் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போதைய கைது விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையை மேலும் வலுவடையச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.