கனடாவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.
கனடாவின் மேற்கு அல்பேர்ட்டா பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சிறிய ரக விமானம் ஒன்று தண்ணீரில் வீழ்ந்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது இருவர் நீரில் மூழ்கியதாகவும், அவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், தண்ணீரிலிருந்து மீட்கப்பட்ட மற்றுமொருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.