இது தொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஞ்சன் ராமநாயக்க கூறியதாகக் கூறப்படும் கருத்துக்கள் குறித்து ஜூலை 21 ஆம் திகதிக்கு முன்பு எழுத்துப்பூர்வ விளக்கமளிக்குமாறும் கோரியுள்ளார்.
ஆலயங்களில் இளம் பிக்குகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டி, ரஞ்சன் ராமநாயக்க சமீபத்தில் பிக்குக்கள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டார்.
குறிப்பாக “தற்பொழுது நாட்டில் கூக்குரல் இட்டுத் திரியும் 90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாக” இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் பிரதமர் மட்டுமன்றி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் இதுபோன்ற கருத்துக்களை அவர் கடுமையாக கண்டிப்பதாகவும் இதுபோன்ற கருத்துக்கள் கட்சியின் கொள்கைக்கு மாறானது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.