LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 20, 2019

நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி: ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி
ஆலய வருடாந்த மகோற்சவம் இவ்வருடமும் சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்ற அனைத்து விடயங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர மேயர் இம்மானுவல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

வருடாந்த மகோற்சவத்துக்கான முன்னாயத்த திட்டங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான இரண்டாவது விசேட கலந்துரையாடல் யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்.மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் (இந்து விடுதி) நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இக்கலந்துரையாடலில் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். மாநகர ஆணையாளர், பிரதி ஆணையாளர், பிரதம கணக்காளர், யாழ். மாநகர உத்தியோகத்தர்கள், நல்லூர் பிரதேச செயலாளர், பொது சுகாதார பரிசோதகர்கள், சமயத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திருவிழாவின் போதான விசேட ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு:

வழமை போன்று இம்முறையும் நல்லூர் உற்சவ காலத்தில் தேவையான பொது, சுகாதார, போக்குவரத்து ஏற்பாடுகளை மாநகரசபை செயற்படுத்தவுள்ளது. உற்சவ காலத்தில் அங்கப்பிரதட்சணம் செய்யும் அடியார்களின் நலன் கருதி ஆலய வீதிகளுக்கு மணல் பரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதித் தடைக்குள் – ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் பகுதிகளினுள் எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட்செல்ல முடியாது.

வீதித் தடைகளினுள் வசிக்கின்றவர்களுக்கான உள்நுழைவு அனுமதி அந்ததந்தப் பகுதி கிராம சேவையாளர்களின் பதிவின் பிரகாரம், பிரதேச செயலக மற்றும் மாநகர சபை அதிகாரிகளின் பரிந்துரை அடிப்படையில் வழங்கப்படும். இவை தவிர ஆலய நிர்வாகத்தினரால் அனுமதிக்கப்படுபவர்களுக்கும், மாநகர சபை உறுப்பினர்களுக்கும் வீதித் தடைகளின் ஊடாகப் பயணிப்பதற்கான உள்நுழைவு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன.

வழமையான இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்படும். தேசிய பாதுகாப்புக் கருதி பொலிஸாசாரினால் விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கமைய வீதித்தடைகளில் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஆலயப் பிரதேசத்தினுள் அடங்கும் பருத்தித்துறை வீதி, கோவில் வீதிகளுக்கான மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுப் போக்குவரத்து மார்க்கங்கள் மாற்றியமைக்கப்படும்.

இம்முறை ஆலயத்துக்கு நேர்த்திக் கடன்களைக் செய்வதற்காக வருகின்ற காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன் வீதி, பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

காவடிகள் வருகின்ற முன் வீதி தவிர்ந்த ஏனைய பக்கங்களில் வழமையை விட சற்று பின்தள்ளி கடைகள் அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும்.

ஏப்ரல் தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகளைக் கருத்திற்கொண்டு பொலிஸ் தலைமை அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7