நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட ருவிற்றர் பதிவுகளில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க கொங்கிரஸின் பெண் உறுப்பினர்கள் மிக மோசமான அரசாங்கங்களை கொண்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் தத்தமது சொந்த நாட்டுக்கே திருப்பி போகவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இனவெறியை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதியின் இக்கருத்தும் இந்த பெண்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட மொழியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் உட்பட அமெரிக்க ஜனாதிபதியின் இந்த கருத்துக்கு அமெரிக்க அரசியல் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.