இதன்படி, 2021 ஆம் ஆண்டு தொடக்கம் தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று பாடப் புத்தகங்கள் மாத்திரமே அச்சிடப்படவுள்ளதாக கல்வி வெளியீட்டக ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இந்த பாடப் புத்தகங்கள் மூன்றிலும் மூன்று தவணைகளுக்கான கற்பித்தல் நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களும் மூன்று பிரிவுகளாக உள்வாங்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதன் மூலம் மாணவர்களின் பாடப் புத்தக எடைகளின் சுமையை பெருமளவு குறைக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பாடப் புத்தகங்களை மூன்றாக அச்சிடுவதன் மூலம் பதிப்பக செலவு, போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தல் செலவுகளையும் குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.