அத்துடன், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேடபாளர் யார் என்ற சர்ச்சைக்கு ஓகஸ்ட் 11 ஆம் திகதி தீர்வு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “இதுவரையில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கு ஐந்து பேரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எதிரிணியில் அங்கத்துவம் வகிக்கும் அனைத்து கட்சிகளினதும் அபிப்பிராயங்களுக்கு அமையவே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுசெய்யப்படுவார்.
இதேவேளை, தேர்தலில் தமிழ் – முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. எம்மை புறக்கணிப்பதற்கான உரிய காரணம் ஏதும் கிடையாது. போலியான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியிலேயே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டன. சுமத்தப்பட்ட குற்றங்கள் ஏதும் இதுவரையில் நிரூபிக்கப்படவில்லை.
தேர்தலை கருத்திற்கொண்டு அரசாங்கம் தற்போது மாறுப்பட்ட பல விடயங்களை முன்னெடுக்கின்றது. தேர்தல் வெற்றிக்காக இம்முறை மேற்கொள்ளும் உபாயங்கள் ஏதும் பயனளிக்காது” என்று அவர் குறிப்பிட்டார்.