பூமியின் நன்மை கருதி இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளவே விருப்பம் கொண்டுள்ளதாக இங்கிலாந்து இளவரசர் ஹரி தெரிவித்துள்ளார்.
சீமாட்டி மேகன் மாகிளுக்கும், இளவரசர் ஹரிக்கும் கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தையுடன் அரச குடும்பத்து தம்பதி செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்களை சூழ்ந்துக் கொண்ட செய்தியாளர்கள், எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேள்வியெழுப்பியபோது இளவரசர் ஹரி இவ்வாறு தெரிவித்தார்.
குளத்தில் குதித்து விட்ட தவளைகளின் நிலையில் இருக்கிறோம் என்றும், அந்த நீர் ஏற்கனவே கொதிக்கத் தொடங்கிவிட்டது எனவும் சுற்றுச்சூழல், மக்கள்தொகைப் பெருக்கம் பற்றிய கருத்துகளைக்க கூறிய ஹரி, ஆர்ச்சி என்ற தமது ஆண் குழந்தையின் பிறப்பால் உலகை புதிய அணுகுமுறையுடன் காண்பதாக தெரிவித்தார்.
ஆனாலும், அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளவே விருப்பம் என்றும் ஹரி குறிப்பிட்டார்.