அதனடிப்படையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 42 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யோசனைக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவஞானம் ஸ்ரீதரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 22ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக யோசனை இன்று சபையில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் மற்றும் அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் காரணமாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், அப்போதிலிருந்து தொடர்ந்தும் இது நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது