பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு விரைந்து நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 20 மில்லியன் ரூபாய் நிதியை தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பான நிதியம் வழங்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.
அத்துடன், அனர்த்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஒரு மில்லியன் ரூபாய் நிதி மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட வீடுகளுக்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
இதற்காக 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.