அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
குறித்த வேலை நிறுத்தம் நேற்று (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு கைவிடப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்க தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் கூறியுள்ளது.
இதனால் கடந்த 16ஆம் திகதி ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் தமது கோரிக்கைகள் தொடர்பாக நேற்று மாலை பேச்சுவார்ததை நடத்தியதாகத தெரிவித்த அவர், இதன்போது எழுத்து மூலம் வழங்கப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதாக கூறினார்.