பிரதேசத்தில் பலத்த காற்றின் காரணமாக பாரிய ஆல மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதோடு மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இதன்போது குறித்த வீட்டிலிருந்த 4 வயது சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
நாட்டின் பல பாகங்களில் பலத்த காற்று மற்றும் கடும் மழை பெய்து வருகிறது. இந்த சீரற்ற காலநிலை குறித்து மக்கள் அவதானமாக இருக்குமாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.