ஸ்ரேர்லிங் பவுண்ட் 1.1% க்கு முறையே டொலருக்கு எதிராக $1.2242 மற்றும் யூரோவுக்கு எதிராக €1.1004 ஆகக் குறைவடைந்துள்ளது.
ஐ.என்.ஜி குழுமத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரேர்லிங் நாணயமானது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வணிகமுயற்சியாளர்கள் கடைசி நிமிட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
பன்னாட்டு வணிகக் குழுக்கள் இங்கிலாந்தில் முதலீட்டை மேற்கொள்வதற்கான ஆர்வத்துடன் இருப்பதனால், எந்தவொரு ஒப்பந்தத்தையும் மீளப்பெற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளன.
அதேவேளை புதிய அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாடு தெளிவாக வௌிப்பட்டதன் பின்னர், பவுண்டின் பெறுமதி குறைந்தது என்று ஐ.என்.ஜி குழுமத்தின் நாணய மூலோபாய நிபுணர் Petr Krpata தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் மைக்கேல் கோவ் கூறுகையில்; அரசாங்கம் தற்போது ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நோக்கிய அனுமானத்தில் செயல்படுகிறது என்று கூறியுள்ளார்.