இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இருக்கமான நிலைமை ஏற்பட்டுள்ள தருணத்தில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கடந்த வார இறுதியில் ஒரு கனேடியப் பிரஜை கிழக்கு மாகாணமான சாண்டோங்கில் உள்ள யந்தாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கனடா அரசாங்கம் கூறியது. ஆனால் அதுபற்றிய விவரங்களை வழங்கவில்லை.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் செங் ஷுவாங் கூறுகையில், வெளிநாட்டு மாணவர்கள் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றச்செயலை சாண்டோங் பொலிசார் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளதுடன், வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் கனேடியர் என ஷூவாங் குறிப்பிட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது.
ஜியாங்சு மாகாணத்தில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட மற்றொரு போதைப்பொருள் வழக்குக்கும் இந்த பிரச்சினை எதுவும் இல்லை என்று ஜெங் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஜியாங்சுவில் நான்கு பிரித்தானியப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டதாக பிரித்தானியத் தூதரகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.