தமிழ் வளர்ச்சி மன்றத்தின் ஏற்பாட்டில் சிட்னி பல்கலைக்கழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
‘அமைதிக்கும் நல்லிணக்கத்திற்குமான இலக்கியங்கள், திருக்குறள் அனைத்துல இலக்கியம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை அனைத்துலக திருக்குறள் மாநாடு நடைபெறவுள்ளது.
திருக்குறள் பொதுமறையாக யுனஸ்கோவினால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்டு வரும், நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாநாடு கடந்த வருடம் இங்கிலாந்திலுள்ள லிபர்பூலின் ஐந்து இடங்களில் நடாத்தப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.