கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது சட்டசபையில் நாளை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையிலேயே, பெங்களூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் சட்டசபை கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு அவர்களின் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி உறுப்பினர்கள் யாருமே மதிப்பளிக்காத நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவணை வாங்கும் முயற்சிகளால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.
இதற்கிடையில், அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி நிர்வாகம் தொடர்பாக தனிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என குமாரசாமிக்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், அதிருப்தி உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ஆம் திகதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் ‘மும்பையில் தங்கியுள்ள 15 அதிருப்தி உறுப்பினர்களும் சட்டசபைக்கு வந்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று யாரும் எந்த சூழ்நிலையிலும் அவர்களை வற்புறுத்த கூடாது எனவும், வாக்கெடுப்பில் கலந்துகொள்ள வேண்டுமா, கூடாதா? என தீர்மானிக்கும் உரிமை அவர்கள் கையிலேயே இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லை என திட்டவிட்டமாக இன்றும் தெரிவித்துள்ளனர்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க தயார் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா, முதலமைச்சர் குமாரசாமி மற்றும் சட்டசபை சபாநாயகர் ஆகியோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ள நிலையில், நாளை தான் குமாரசாமி தலைமையிலான அரசின் கடைசி நாளாக அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.