நேற்று (செவ்வாய்க்கிழமை) பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue Abel Hovelacque வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் கட்டிடப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மூங்கில் தடிகள் அறுந்து விழுந்துள்ளன.
அதில் நின்றிருந்த நான்கு கட்டிட தொழிலாளர்கள் தவறி கீழே விழுந்துள்ளனர். குறித்த கட்டிடம் RATP ரயில் சேவைக்குச் சொந்தமான கட்டிடம் எனவும், ஆறாம் இலக்க மெற்றோ ரயில் சேவையின் விரிவாக்கலுக்கான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய மூவரும் மருத்துவமனைக்கு விரைவாக கொண்டுசெல்லப்பட்டனர்.
நேற்று நண்பகல் வரை அந்த பகுதியில் போக்குவரத்து தடையேற்பட்டதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் தடயங்கள் சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.