
கனடாவின், எட்மன்டன் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 30ஆம் திகதி மாயமான இளைஞனே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலை 14 மற்றும் நெடுஞ்சாலை 21 பகுதியில் கடந்த புதன்கிழமை குறித்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்த பொது மக்களை தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
இந்தநிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
