மதுரையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு உள்ளதா, இல்லையா என்பதை சிறுபான்மையினர்தான் கூற வேண்டும்.
மேலும் மத்திய அரசு சார்பில் தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு அனுப்பப்படும் நிதிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவது தமிழக அரசின் கையாளாகாததனத்தை காட்டுகிறது. வேலூர் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
மேலும் முத்தலாக் சட்டமூலத்தில் அ.தி.மு.க. மக்களவையில் ஒரு நிலைப்பாடும் ராஜ்யசபாவில் ஒரு நிலைப்பாடும் எடுத்திருப்பது அ.தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
இதன்போது, சிலை கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அதை பொறுத்திருந்து பார்ப்போம் என பதிலளித்துள்ளார்.