இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த தீ விபத்தில் மேலும் 9 பேர் படுகாயமடைந்த நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கெப்லவுன் ரியாவ் மாகாணத்தில் உள்ள கப்பல் பழுது பார்க்கும் தளத்தில் குறித்த கப்பல் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
தனியாருக்குச் சொந்தமான சொகுசு கப்பல் ஒன்றே இவ்வாறு தீ விபத்தில் அழிவடைந்துள்ளது.
கப்பலில் பழுது பார்க்கும் பணியில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது குறித்த முழு விவரம் தெரியாததால் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.