நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நுவரெலியா வைத்தியசாலையில் அமைக்கபட்ட ஒரு தொகுதி கட்டிடம் மக்கள் பாவனைக்கு இன்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இன்று திறக்கப்பட்ட இந்த வைத்தியசாலையின் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அதனை திறக்க அனுமதிக்கப்பபோவதில்லை எனவும், வைத்தியர்கள் சிலர் கூறினர்.
அதன் காரணமாகவே வைத்தியசாலை திறக்க காலத்தாமதம் ஆகியது. மாறாக எனது தனிப்பட்ட தாமதம் இதற்கு காரணம் அல்ல. மேலும் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வைத்தியசாலை சகல நவீன வசதிகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த பிரதேச மக்களுக்கு சிறந்த பலனை பெற்றுக் கொள்ள முடியும். நவீன் திஸாநயக்கவின் தந்தை இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக்கும், நாட்டின் அபிவிருத்திக்கும் பாரிய பங்களிப்பு செய்தார்.
நாட்டை கட்டியெழுப்ப கூடிய ஆளுமை அவரிடம் காணப்பட்டது. அது பிறப்பிலிருந்தே அவருக்கு கிடைத்திருந்தது. நாட்டை கட்டியெழுப்ப கூடிய எதிர்கால சிந்தனை மிக்க ஒரு அரசியல் தலைவராவார். யுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார்” என்றார்.