
தேசியக் கட்சிக்கும், ரணில் விக்ரமசிங்கவுக்கும் கிடைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
மாவத்தகம பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் விருப்பத்திற்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது.
சிங்கள பெரும்பான்மையினரின் கருத்துக்கள் பிற்போடப்பட்டுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை தோற்கடித்து இவ்விரு தரப்பினரும் இடைப்பட்ட காலத்தில் தமது சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவே உள்ளனர்.
நாடாளுமன்ற நம்பிக்கையினை வெற்றிகொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒருபோதும் இனி மக்களின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை” என அவர் தெரிவித்தார்.
