எதிராக வன்முறையினை கையில் எடுக்க கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
கன்னியாவில் தமிழ் – சிங்கள மக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கன்னியா விவகாரத்தில் ஜனநாயக வழியில் உரிமை கோரும் தமிழ் மக்களின் உணர்வுகளை நாம் மதிக்கின்றோம். அந்தவகையில் நீதியின் அடிப்படையிலேயே தீர்வு எட்டப்பட வேண்டும்.
ஆகையால் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள – பௌத்த மக்கள் வன்முறையை பிரயோகிக்கக் கூடாது” என அத்துரலிய ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்