தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கால அவகாசம் தேவையென தேர்தல் ஆணையகம் உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) மனுத் தாக்கல் செய்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து தி.மு.க தொடர்ந்த வழக்கு எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ள மாநில தேர்தல் ஆணையகம், தேர்தலை நடத்துவதற்கு ஒக்டோபர் 31ஆம் திகதி வரை கால அவகாசத்தை கோரியுள்ளது.
அந்தவகையில் வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஆகியவற்றின் காரணமாகவே உள்ளூராட்சித் தேர்தல் பணிகள் தாமதமாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.