ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா வழமைபோன்று இம்முறையும் சிறப்பாக இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்த சுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா தொடர்பாக உண்மைக்கு மாறான பல செய்திகள் பரவிவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு ஆலய தர்மகர்தாவின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா ஓகஸ்ட் 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 தினங்கள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
அத்துடன், 26ஆவது நாள் திருக்கல்யாண உற்சவமும் 27ஆம் நாள் வைரவர் உற்சவமும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.