விமானம் ஒன்றை பரசூட்டின் உதவியுடன் தரையிறக்கும்போதே நிலை தடுமாறி ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிழக்கு சுவீடன் நாட்டின் உமெயா எனும் பிரதேசத்திற்கு வெளியில் உள்ள ஆற்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தில் 9 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில் சேத விபரங்கள் குறித்து சரியான தகவல்கள் வெளியாகவில்லை.