துனிசிய கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததனால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்தோருடன் சென்ற கப்பல் ஒன்று துனிசிய கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தை அடுத்து துனிசிய மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக யு.என்.எச்.சி.ஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துனிசியாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.