தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகர் அருகில் பாச்சாகான் சவுக் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அருகிலேயே நேற்று (செவ்வாய்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸூக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு அடையாளம் தெரியாத நபர்களால் இயக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது.
பொலிஸ் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.