
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் 2 சடலங்கள் மீட்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் குமார்ஹட்டி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த உணவகத்தில் ஏராளமான இராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.
இந்த உணவகம் அமைந்துள்ள கட்டிடம் இன்று மாலை திடீரென்று இடிந்து விழுந்த விபத்தில் 30 இராணுவ வீரர்கள் உட்பட 35இற்கும் அதிகமானவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் சுமார் 20 பேரை உயிருடம் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறன.
