பகுதியான லாப்ரடோர் (Labrador) பிரதேசத்தில் உள்ள ஏரிக்குள் கடல் விமானம் ஒன்று நிலைதடுமாறி வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்திருந்ததுடன் மேலும் நான்கு பேர் காணமல் போயுள்ளனர்.
கியூபெக்கில் உள்ள எயார் சகுய்னேய் (Air Saguenay) நிறுவனத்தால் இயக்கப்படும் DHC-2 பெவர் விமானத்தில் 7 பேர் சென்றிருந்தனர்.
ஒரு விமானி, இரண்டு வழிகாட்டிகள் மற்றும் நான்கு பயணிகள் அதில் பயணித்ததாக கூறப்படுகின்றது.
காணமல் போனோரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.