
குளொஸ்ரரைச் சேர்ந்த 51 வயதான கார்ல் பீச் என்பவரே இவ்வாறு நீதியின் போக்கைத் திசைதிருப்பி பொய்யான குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்ததற்காக சிறைத்தண்டனை பெறுள்ளார்.
கார்ல் பீச் ஏற்கனவே மோசடி மற்றும் சிறுவர் மீதான பல பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூகாஸல் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி கோஸ் தெரிவிக்கையில்; கார்ல் பீச் தனது குற்றங்களுக்கு எந்தவொரு குற்ற உணர்வையும் வெளிப்படுத்தவில்லை என்று குறை கூறினார்.
கார்ல் பீச் மற்றும் சில உறவினர்களால் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள், முற்றிலும் நியாயப்படுத்தப்படாத ஒரு சூனிய வேட்டைக்குப் பலியானார்கள் என்றும் விசாரணை நடந்த காலங்களில் சிலர் இறந்தனர் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மூத்த அரசியல்வாதிகள், ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டியதுடன் 1970 மற்றும் 1980 களில் சிறுவர்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டதாகவும் கார்ல் பீச் குற்றம் சாட்டியிருந்தார்.
முன்னாள் பிரதமர் சேர் எட்வேர்ட் ஹீத், தொழில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லோர்ட் ஜன்னர் மற்றும் முன்னாள் எம்ஐ6 தலைவர் சேர் மோரிஸ் ஓல்ட்ஃபீல்ட் ஆகியோர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கார்ல் பீச் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
