![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3n7q4UPKne_L6C_umWXZp8O5xQRcc42tq-mT8EAwpv11AP0O1HpXfNBO54I2OUvdZT-JVa4EljpMONGHFFKKQSE5BCz3dC1Nh6Qek3vpOsbw3e2yP7dTlRlXJ1EBJ1DDxFi3u9w2h_s4/s640/108038467_c153629c-ea72-4893-a14a-ce44fb834479.jpg)
16 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அமெரிக்க சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு இவ்வாறு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து கைதிகளுக்குமான மரண தண்டனை முறையே எதிர்வரும் டிசம்பர் மற்றும் அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இருவேறு கட்சிகளின் நிர்வாகத்தின் போதும், மிகவும் மோசமான குற்றவாளிகளுக்கு மாத்திரமே இதுவரையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பார் குறிப்பிட்டுள்ளார்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)