மற்றும் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கனேடியர் ஒருவருக்கு சீன நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரண்டாவது கனேடியராக இவர் நோக்கப்படுகிறார்.
குறித்த கனேடியருடன் ஐந்து வெளிநாட்டவர்கள் உட்பட பத்து பேருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையாக மரண தண்டனையை நிறைவேற்றியதாக கனடா பீஜிங் மீது குற்றம் சாட்டியது. அத்துடன் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் மற்றுமொரு கனேடியருக்கு சீனா மரண தண்டனை விதித்திருந்தது. இச்சம்பவம் கனேடிய பிரதமரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
ஹூவாவி நிதித்துறை அதிகாரி கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.