LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, May 10, 2019

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொருவர் அதிரடியாகக் கைது!

கடந்த ஈஸ்டர் தினத்தில் குண்டுத்
தாக்குதல்களை மேற்கொண்ட ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 8 மில்லியன் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்படையதாகக் கருதப்படும், புஹாரி மொஹம்மட் ரஃபிஹ் என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன் அவர்களை விசாரணை செய்வதனூடாக பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7