வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான ‘ஷர்மன்’ இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத்திறனை விரிவுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான ‘ஷர்மன்’ இன்று காலை இலங்கை நேரப்படி 10.00 மணியளவிள் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பல் கடற்படை சம்பிரதாயற்களின் படி கடற்படையினரால் வரவேற்கப்பட்டது. இந்த கப்ப லின் கட்டளையிடும் தளபதியாக கப்டன் ரோஹித்த அபேசிங்க செயற்படும் அதேவேளை அக்குழுவில் 22 அதிகாரிகளும் 111 கடற்படையினரும் உள்ளனர்.
போர் ஆயுதங்களையும் கொண்டுள்ள இந்த கப்பல் 115 மீட்டர் நீளமானதுடன இது இலங்கை கடற்படையினரிடம் காணப்படும் மிகப்பெரிய கப்பலாகும்.
இதனை கடலின் ஆழமான பகுதிகளில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.