LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Sunday, May 12, 2019

கூட்டமைப்பின் எதிர்ப்பு – அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படுமா?

அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பது குறித்து
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து ஏப்ரல் 22 ஆம் திகதி அவசரகால சட்டத்தை அமுல்படுத்த நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.

நாடுமுழுவதும் அவசரகால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொது பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட குறித்த தீர்மானம் நாடாளுமன்றில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

நாட்டில் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துவத்தின் ஊடாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விடயங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக 1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தினாலும், தேசிய அரச பேரவையின் 1978 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1988 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் அவசர சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் நீதிமன்றம் ஒப்புதல் இல்லாமல் சந்தேக நபர்களைக் கைது செய்யவோ அல்லது விசாரணை செய்யவோ பொலிஸ் மற்றும் இராணுவதிற்கு கூடிய அதிகாரங்களை வழங்குவதாக என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்தது.

அதுமட்டுமன்றி பொலிஸ் அதிகாரத்தை விரிவுபடுத்தல், தேடுதல், கைப்பற்றுவது, கைது செய்தல் மற்றும் தனிநபர்களை கேள்விக்கு உட்படுத்துவதும் ஜனாதிபதியின் இந்த அவசர கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7