குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.