தொடர்பான மதிப்பீட்டில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
விலைச் சூத்திரத்திற்கு அமைவாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்படும்.
இருப்பினும் கடந்த மாதம் 12 ஆம் திகதி நாட்டில் எரிபொருள் விலைத்திருத்தம் நடைமுறைப்படுத்தாது இருப்பதற்குத் தீர்மானித்ததாக, நிதி அமைச்சு குறிப்பிட்டது.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தொடர்ச்சியாக அதிகரித்தாலும் பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு இதை நடைமுறைப்படுத்தாது இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக, நிதி அமைச்சு அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தது.
இந்நிலையில் இம்முறை எரிபொருள் விலை தொடர்பான மதிப்பீட்டில் இதுவரை எந்த ஒரு முடிவு எடுக்கப்படவில்லை, எனவே எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படாதென தகவல்கள் தெரிவிக்கின்றன.