அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுபலசேனா கோரியுள்ளது.
அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை அணிதிரட்டி வீதிப் போராட்டத்தை முன்னெக்கப்போவதாக அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
ராஜகிரியவில் பொதுபல சேனாவின் காவெசாக் பண்டிகைரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் விதாரந்தெனிய நந்த தேரர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன், பிரச்சினையை ஏற்படுத்தி ஞானசார தேரரை விடுதலை செய்ய வைப்பது எமது எதிர்ப்பார்ப்பல்ல. ஆனால் ஞானசார தேரரின் விடுதலை குறித்து பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக அவரின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது ஜனாதிபதியின் பொறுப்பாகும் என பொதுபலசேனா குறிப்பிட்டுள்ளது.