சர்ச்சை தொடர்பாக நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எந்தவித குற்றச்சாட்டுமின்றி பொலிஸ்மா அதிபர் புஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குற்றச்சாட்டு முன்வைத்து ஒரு உயர் அதிகாரியை கட்டாய விடுமுறையில் அனுப்புவதே சிறந்த முறை என என ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து தேசிய பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளைத் தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபரை இராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இருந்தபோதும் அவர் பதவி விலகாத பின்னணியில் புஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறையை வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதன்பின்னர் பதில் பொலிஸ்மா அதிபர் நியமிக்கப்படதை தொடர்ந்து பொலிஸ்மா அதிபருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது.
இதன் காரணமாக பொலிஸ்மா அதிபரை கட்டாயமாக பதவியில் இருந்து அகற்ற ஜனாதிபதி சிறிசேனவுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பற்றிய பல கேள்விகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.