அமைச்சரவை அந்தஸ்த்தற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தீவிரவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உதவியவர்கள், நிதி உதவிகளை வழங்கியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் இலங்கை சட்டங்களில் உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாகரிகமான சமூகத்திற்கு மரணதண்டனை அவசியமற்றது என்ற போதிலும், இவ்வாறான தீவிரவாதிகளுக்கு எதிராக மரணதண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.