LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, May 11, 2019

தாக்குதலுக்கான வெடிபொருட்கள் தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டனவா?

ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கான வெடிபொருட்கள் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கலாமென இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சந்தேகம் வெளியிட்டுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டிருப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக கூறியுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர், இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளன. இந்நிலையில், அங்கிருந்து இந்த வெடிபொருட்கள் கொண்டுவரப்பட்டனவா என்பது தொடர்பாக பல கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து, ரொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தாக்குதல்கள் தொடர்பான விசாரணைக்கு அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறை, இன்டர்போல் உள்ளிட்ட 8 நாடுகளின் புலனாய்வு அமைப்புகள் இலங்கைக்கு உதவுவதாக குறிப்பிட்டுள்ள இராணுவத் தளபதி, எதிர்காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அதியுயர் தொழில்நுட்பத்தை வழங்க இந்தியா, சீனா, அமெரிக்கா, இஸ்ரேல், அவுஸ்ரேலியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியன இணங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, தாக்குதலுக்கு சஹரானே தலைமைத்துவம் வழங்கியுள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ள இராணுவத் தளபதி, இதற்கு பின்னால் செயற்பட்ட தரப்பினர் தொடர்பாக பல கோணங்களில் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த இரண்டரை வாரங்களுக்கு மேல் நடத்தப்பட்ட தேடுதலில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, தொடர்ச்சியாக தேடுதல் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். மற்றொரு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதனை தடுப்பதற்கான சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மகேஸ் சேனாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களில் சுமார் 250 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7